
எங்களை பற்றி
இராமேஸ்வரம் பூஜைகளின் நிபுணர்
தில ஹோமம் செய்தபோது சங்கல்பத்தில் எவர் எவர் பெயரை சேர்த்துக் கொண்டு செய்தீர்களோ அவர்களுக்கெல்லாம் புண்ணியம், (நிவர்த்தி) கிடைப்பது உறுதி. உங்கள் மூத்த சகோதரர் இதில் பங்கேற்றது மிகவும் விசேஷம், தில ஹோமத்தில் முக்கியமான விஷயம், கலஸ ஸ்தாபனம் பண்ணி செய்யக்கூடிய பிதுர் பூஜை, பிரதிமா பூஜை, எமனுக்கும் மாந்தி சனி பகவானுக்கும் செய்யக் கூடிய பூஜைகள் ஆகியன. சாஸ்திரப்படி ஒரு மந்திரத்தின் பரிபூரணப் பலனை அடைய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆவிருத்திகள் செய்ய வேண்டும். அதற்கு மேல், சௌகரியப்படி எத்தனை ஆவிருத்தி செய்தாலும் நல்லதே. இந்த ஹோமத்திற்கு அபாரமான சக்திகள் உண்டு. பிதுர் தோஷங்கள் 24 விதமான வந்திய தோஷங்கள், மலட்டுத் தன்மை, கருக் கலைதல், சென்ற ஜென்மத்தில் செய்த கொடுமைகளால் சந்தான பாக்கியம் இல்லாமல் போகுதல், சர்ப்ப தோஷம் உள்பட பல தோஷங்கள், இதைச் செய்தால் நிவர்த்தியாகும். ஸ்திரி வஹத்தி உள்படப் பல பாவங்களை இந்த ஹோமம் நிவர்த்தி செய்யும். பூர்வ வம்சத்தில் எவரேனும் காலமாகியிருந்து, அவருக்குச் செய்யக்கூடிய கடமைகள் விட்டுப் போய், அதனால் தோஷங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் இந்த ஹோமம் நீக்கும். அந்தப் பூர்வ வம்ச ஜீவன்களும் அடைவார்கள். பிதுர்லோகத்தை, பிதுர் தோஷம் இருக்கக்கூடிய ஜாதகத்திற்கு இந்த தோஷ நிவர்த்தி செய்யாவிட்டால் திருமணம் தடைபடுதல், புத்திர பாக்ய பிராப்தி தடைபடுதல் போன்ற பல கஷ்டங்கள் வந்து சேரும் இதைப்பற்றிய விளக்கங்கள் rhujh திலகம் என்ற கிரந்தத்தில் உள்ளன. தமிழில் இதைப்பற்றிய விளக்கம் இல்லை. தில ஹோமத்தைப் பற்றி நன்கு அறிந்த தீட்சிதர்கள் மூலம் முறையாக இதைச் செய்தால் கண் கூடாகப் பலன்கள் தெரியும். கஷ்டங்கள் நிச்சயமாக விலகி இருக்கும்.
ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தின் கடுமைக்கு ஏற்றவாறு ஆவிருத்திகளும் கூடும். அவரவர் சௌகரியத்தையொட்டி இந்தத் தில ஹோமத்தை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, பங்கு போட்டுக் கொண்டு செய்யலாம். இதுவும் மிகவும் விசேஷமானது.

பணி
தில ஹோமம் போன்ற வேதச் சடங்குகள் மூலம் பிதுர் தோஷ நிவர்த்தி செய்து, குடும்ப நலன், சந்தான பாக்கியம், திருமண தடை அகற்றம், மற்றும் வாழ்க்கையில் உள்ள பல்வேறு தோஷங்களின் விளைவுகளை சரி செய்யும் ஆன்மிக ஆற்றலை சமுதாயத்திற்குக் கொண்டு வருதல். முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சமாதானம் வழங்கி, அவர்களின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வழிகாட்டுதல்.

பார்வை
பாரம்பரிய வேதச் சடங்குகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் விளக்கி, அதன் மூலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஆன்மிக சமநிலை மற்றும் ஆனந்தம் உருவாக்குதல். அனைத்து தோஷங்களுக்கும் தீர்வாக தில ஹோமம் போன்ற சடங்குகளை முறையாக செய்து, சகலமான குடும்ப நலன்களும் பெறத்தக்க நிலையில் சமுதாயத்தினை நிலைநாட்டுதல்.